லவ் டுடே திரைப்படத்தில் நடித்த தன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக சினிமா துறையில் ஒரு நடிகர் அல்லது ஒரு இயக்குனர்கள் தங்களுடைய முதல் படம் வெற்றி அடைந்து விட்டால் அடுத்ததாக அடுத்தடுத்த படங்களில் தங்களுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்துவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனும் லவ் டுடே படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி லவ் டுடே படத்திற்கு பிறகு ஒரு பத்து நிறுவனம் பிரதீப் ரங்கநாதனிடம் தங்களுடைய நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்களாம்.
ஆனால் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் 20 கோடி கொடுங்கள் நான் நடிக்கிறேன் என்று அதிரடியாக கூறுகிறாராம். இதனால், பிரதீப் ரங்கநாதனிடம் கதை சொல்ல போகும் தயாரிப்பாளர்கள் தெரித்தோடுகிறார்களாம். மேலும், அப்படி தான் தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்க கூட 20 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
இன்னும் இந்த திரைப்படத்தினை எந்த நிறுவனமும் தயாரிக்கவும் முன் வரவில்லையாம். படத்தினை தற்காலிமாக கை காசு போட்டு விக்னேஷ் சிவன் தான் தயாரித்து வருகிறாராம். முன்னதாக இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தினை தயாரிக்கவிருந்தது. படத்தின் கதையும் கமல்ஹாசனுக்கு பிடித்துப்போக தயாரிக்க சம்மதம் தெரிவித்தாராம்.
கமல்ஹாசனுடன் இணையும் ‘லவ் டுடே’ பிரதீப்.! பட்ஜெட் மட்டும் இத்தனை கோடிகளா.?
பிறகு பண பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து கமல் நிறுவனம் விலக 7 ஸ்க்ரீன் நிறுவனம் அந்த திரைப்படத்தினை தயாரிக்க முன் வந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…