தமிழகம், மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு மனு அளித்துள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகி ஆதரவையும் , எதிர்ப்பையும் கிளம்பியுள்ள திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. சுதிப்தோ சென் எனும் பாலிவுட் இயக்குனர் இயக்கியுள்ள இந்த படமானது ஹிந்தி மட்டுமின்றி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தயாரானது.
இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என காரணங்களை குறிப்பிட்டு மேற்கு வங்க அரசு தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. அதே போல, தமிழகத்தில் பட விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட மறுத்ததால் மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை குறிப்பிட்டு, தனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு குறிப்பிட்ட மாநிலங்களில் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கோரி தி கேரளா ஸ்டோரி படக்குழு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு விசாரணை மே 12 (நாளை) வெளியாக உள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…