தென்மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதனால், பாதிகப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நினைத்த நடிகர் விஜய், நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
முதலில் நிவாரணம் வழங்குவதற்காக நடிகர் விஜய் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் வந்ததால், பாதுகாப்புக்கு நின்றிருந்தவர் திடீரென மண்டபத்தின் கதவை மூட, அது எதிர்பாராத விதமாக நடிகர் விஜயின் முதுகு பகுதியை தாக்கி கீழே தடுக்கி விழ பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சற்று சுதாரித்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அப்போது அவரை நேரில் பார்த்து பரவசமடையும் ரசிகர்கள் அவருடைய கண்ணத்தை கிள்ளுவதும், முத்தம் கொடுப்பதுமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வகையில், விஜய்யிடம் நிவாரணம் பெற வந்த பெண், அவரது கையை தனது தோள் மீது போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தார்.
மேலும், மேடையில் நின்று கொண்டிருந்த விஜய்யிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களது ஆசையை நிறைவேற்ற விஜய் எடுத்த செல்ஃபி தற்போது வைரலாகி வருகிறது. நிவாரணப் பொருட்களை கொடுத்துவிட்டு நடிகர் விஜய் புறப்பட்டார். அலை கடலாக திரண்ட ரசிகர்கள் அவரைக் காண மண்டபம் வெளியேவே காத்துக் கொண்டிருந்தனர்.
நிவாரணம் வேண்டாம் செல்பீ மட்டும் போதும் நமக்கு.
விஜய் கையைப் பிடித்து தன் தோள் மீது போட்டு போஸ் கொடுத்த பெண்.
நடிகர் விஜய்-யை பார்த்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த ரசிகை.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…