Jaragandi [file image]
Game Changer : நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான ‘ஜர்கண்டி’ பாடல் வெளியீடு இன்று ராம் சரணின் பிறந்தநாள் என்பதால், ரசிகர்களுக்கு கூடதல் சிறப்பு விருந்தாக அமைந்துள்ளது.
இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ள ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படம், வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் நாயகன் ராம் சரணை தவிர, கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை பிரபல தமிழ் இயக்குனர் ஷங்கர் எழுதி இயக்க, எஸ்விசி பேனரில் தில் ராஜு தயாரித்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்ய ஷமீர் முகமது படத்தொகுப்பை கையாளுகிறார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…