பிளடி பெக்கர் படத்தின் முதல் சிங்கிள் ‘நான் யார்’ வெளியீடு.!
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக் ஷனில் உள்ளது.

சென்னை: அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் வரவிருக்கும் திரைப்படம் “பிளடி பெக்கர்” (Bloody Beggar) படம் தீபாவளி வெளியீடாக (அக்டோபர் 31) திரைக்கு வருகிறது.
தற்பொழுது, படத்தின் முதல் சிங்களான ‘நான் யார்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தப்படி, பாடல் வெளியாகி இருக்கிறது. படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்களின் தோற்றங்களை உள்ளடக்கிய வீடியோவாக இது அமைந்துள்ளது.
நெல்சன் திலிப்குமார் தனது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் பேனரில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இந்த நிறுவனத்தின் முதல் படம் இதுவாகும். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, நிர்மல் எடிட் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக் ஷனில் உள்ளது. கவின் சமீபத்தில் இளன் இயக்கிய ‘ஸ்டார்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.