நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது, படத்தின் முதல் சிங்கிளான ‘கில்லர் கில்லர்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை கபேர் வாசுகி எழுத, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, தனுஷ் பாடியுள்ளார். 90 காலகட்டத்தை பின்னணியாக கொண்ட பீரியாட்டிக் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
விடுதலைக்காக என்ட்ரி கொடுத்த அசுரன் சிதம்பரம்.! அப்போ விஜய் சேதுபதி மகன்?
அயலான், லால் சலாம் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களுடன் 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளிநாடு திரையரங்கு உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
பிரமாண்டமாக ரெடியாகும் ‘புஷ்பா 2’ ! குஷியில் அடுத்த படத்திற்கு தயாரான அல்லு அர்ஜுன்!
இதற்கிடையில், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஷ்வரனும் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணையவுள்ளனர் என்றும், இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…