LokeshKanakaraj about kaithi 2 [File Image]
நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இது கார்த்திக்கும் மிகவும் ஸ்பெஷலான திரைப்படம் என்றே கூறவேண்டும். ஏனென்றால், இது கார்த்தியின் 25-வது திரைப்படம். எனவே, இந்த படத்திற்கு பிரமாண்டமாக விழா ஒன்று நடத்தவேண்டும் என்று கார்த்தி விருப்பப்பட்டு சென்னையில் விழா ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ஜப்பான் டிரைலர் வெளியிடப்பட்டது.
இந்த விழாவுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூர்யா, தமன்னா, யுவன், சிறுத்தை சிவா, எச்.வினோத் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டதன் காரணமாக கண்டிப்பாக கைதி 2 மற்றும் லோகேஷ் படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போலவே கைதி 2 படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” கைதி 2 படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். படத்திற்கான வேலைகள் எல்லாம் போய்கொண்டு இருக்கிறது. தலைவர் 171 படத்தை முடித்த பிறகு அதற்கான வேலைகளை தொடங்குவேன்.
என்னை விட கார்த்தி தான் சிறந்தவன்! மேடையில் மனம் திறந்து தம்பியை பாராட்டிய சூர்யா!
தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளது. அந்த படத்தை முடித்த பிறகு கைதி 2 படத்திற்கான கதை எழுதும் பணியில் ஈடுபடுவேன். கைதி 2 படம் கண்டிப்பாக ஸ்ட்ராங்கான ஒரு திரைப்படமாக இருக்கும் எனவும் முதலில் கைதி 2 வரும் அதற்கு அடுத்ததாக ரோலக்ஸ் படம் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கைதி திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதால் அது முற்றிலும் லோகேஷ் கனகராஜின் lCU-வில் வரும் என்ற காரணத்தால் அதில் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் எல்லாம் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…