பிரபல இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் தனது மனதிற்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தனிமை பற்றியும், காதல் பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய மிஷ்கின் ” இங்கு யாருமே தனிமையாக இருக்கவில்லை.
தனிமை என்பது நாம் நாமளே நினைத்து கொள்ளும் ஒரு விஷயம் தான். சிலர் காதல் தோல்வி அடைந்துவிட்டால் மதுகுடித்துவிட்டு தனிமை என்று சொல்கிறார்கள். வெளியே எவ்வளவு மரங்கள் இருக்கிறது. மரத்தில் எவ்வளவு பறவைகள் இருக்கிறது. மேலே பல மேகங்கள் உள்ளது. பிறகு எப்படி தனிமையை நாம் உணர்வோம்.
என்னை பொறுத்தவரை தனிமை என்பது ஒண்ணுமே இல்லை. நம்மளாவே நினைத்து கொள்ளும் ஒன்று தான் தனிமை. காதல் தோல்வி அடைந்துவிட்டால் தனிமை என்று கூறுவார்கள். அது தனிமையே இல்லை. முதல் காதலே காமெடி தான். இரண்டாவது காதல் சுமாராக இருக்கும்.
அதன்பிறகு மூன்றாவது காதல் உங்களுக்கு எல்லாமே தெரிந்துவிடும், 5, 6 -வந்து காதல் என்றால் நீங்களே புரிந்து நடந்து கொள்வீர்கள். பிறகு 28-வது காதலில் நீங்கள் செட் ஆகி விடலாம். அதுவரை நீங்கள் காதல் செய்துகொண்டே தான் இருக்கவேண்டும்” என நகைச்சுவையாக மிஷ்கின் பேசியுள்ளார்.
மேலும், இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்திலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் மாவீரன் படம் வரும் ஜூலை 16-ஆம் தேதியும், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…