ஷர்மா ஜோஷி தனது குஜராத்தி திரைப்படமான “Congratulations” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.
இயக்குனர் ரெஹான் சவுத்ரி எழுதி இயக்கியுள்ள குஜராத் திரைப்படம் “Congratulations” இந்த படத்தில் ஷர்மா ஜோஷி முதன்மை கதாபாத்திரத்திலும், மானசி பரேக் கோஹில், ஜெயேஷ் பர்பஹ்யா, அமி பயானி, அர்ச்சன் திரிவேதி, ஸ்வாதி டேவ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஷர்மன் நிறைமாத கர்ப்பிணியாகக் காணப்படுகிறார். மேலும் போஸ்டரில் “பெற்றோருக்கு பாலினம் இல்லை” என்று எழுதப்பட்ட மஞ்சள் டி-ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ளார்.
இப்படத்தில் அவர் கர்ப்பமாக இருக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரிகிறது. இந்த திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள “பெற்றோருக்கு பாலின வேறுபாடு இல்லை” என்ற வாசகத்துடன் வெளிவந்துள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…