முதல் நாள் துணிவு.. அடுத்த நாள் வாரிசு… பக்கா பிளான் போட்ட படக்குழுக்கள்.! வெளியான சூப்பர் தகவல்.!

Published by
பால முருகன்

அஜித், விஜய் ஆகியோர்களின் படங்கள் தனி தனியாக வெளியானாலே தியேட்டரே திருவிழா போல இருக்கும். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் நடைபெறும் சம்பவங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டும். கண்டிப்பாக தமிழ் நாடே திருவிழா போல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

vijay and ajith
Vijay and Ajith [Image Source: Google ]

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகவுள்ளதாக நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் சொல்லப்பட்டு வந்தது.

இதையும் படியுங்களேன்- அடேங்கப்பா இவ்ளோ பெருசா..? அதுல்யாவின் புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.!

Tirupur Subramaniam [Image Source: Google ]

இந்த தகவல் உண்மையா இல்லையா என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய ஒரு பேட்டியில் “வாரிசு” மற்றும் “துணிவு” பொங்கலுக்கு வெளிவருகிறது என்பது உறுதியான தகவல்தான். “துணிவ” ஜனவரி 12 (வியாழன்) அன்றும், ‘வாரிசு’ ஜனவரி 13 (வெள்ளி) அன்றும் வெளியாகிறது. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் இரண்டிற்கும் சமமான திரையரங்குகள் நிச்சயம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் அஜித் -விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும், விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் – விஜய் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

9 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

17 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago