சிவாஜி கணேசனுடன் நடித்த சிஐடி சகுந்தலா காலமானார் – திரையுலகினர் இரங்கல்!

சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன் மூலம் 'சிஐடி' என்கிற அடைமொழியைப் பெற்றார்.

Sakunthala cid

சென்னை : பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா (84) திடீர் நெஞ்சுவலி காரணமாக காலமானார். தற்பொழுது, சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாடகங்களின் மூலம் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா.

சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன் மூலம் ‘சிஐடி’ என்கிற அடைமொழியைப் பெற்றார். பெங்களூரில் வசித்து வந்த சகுந்தலா, சில காலமாக வயோதிக பிரச்சனைகளைச் சந்தித்து வந்தார்.

இந்த நிலையில், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதும், மருத்துவமனைக்கு  அழைத்து சென்ற சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது என அவரது மகள் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சகுந்தலாவின் உடல் நாளை அடக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சகுந்தலா சிவாஜி கணேசனுடன் தில்லானா மோகனாம்பாள், பாரத விலாஸ், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆருடனும் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
janaNayagan - Vijay
arjun tendulkar AND yograj
DhonI - fast stumpings
salman khan and rashmika mandanna
Deepak Chahar - CSK - MI
MS Dhoni - Virat Kohli