படப்பிடிப்பின் போது உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்! நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி!

சென்னை : சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை, 20 உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிழந்தார் என கூறப்படுகிறது. 20அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடல் திருவொற்றியூரில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், சர்தார்-2 ஹீரோ நடிகர் கார்த்தி சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நேரில் சென்று நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார். கதறி அழுதபடி கண்கலங்கி நின்று கொண்டு இருந்த நடிகர் கார்த்தி அவருடைய குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்துவிட்டு சென்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025