தெறிக்கும் சண்டை காட்சிகளில் மிரட்டும் ‘ஃபைட் கிளப்’ டீசர்.! உறியடி விஜய் குமாருக்கு அடுத்த பிளாக்பஸ்டர்…

இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் விஜய் குமார் நடித்துள்ள ‘Fight Club’ (ஃபைட் கிளப்) படத்தின் டீஸர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் வழங்கும் இத்திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய்குமார் இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். உறியடி படத்தை போல் இந்த படத்திழும் அதிரடியான சண்டை காட்சிகள் முழுக்கு முழுக்கு வருகிறது. அந்த சண்டையில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
இப்படத்தை லோகேஷ் கனகராஜின் புதிதாக தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் வழங்குகிறது. படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் பி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். விஜய்யுடன் உறியடி 2 படத்தில் பணியாற்றிய கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“G Squad”தயாரிப்பு நிறுவனம் ஏன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி விளக்கம்.!
அது மட்டும் இல்லாமல், படத்தில் விஜய் குமாருக்கு ஜோடியாக படத்தில் அறிமுக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு மலையாளத்தில் சில குறும்படங்களில் பெண் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜில் ஜங் ஜக் பட நடிகர் அவினாஷ் ரகுதேவன், கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், சரவணவேல் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025