நயன்தாராவை பற்றி ருசிகர தகவல் – ரசிகர்கள் கொண்டாட்டம் !
பிரபல நடிகை நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயின்கள் படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த அறம் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இவர் அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் பிரமாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார், அப்படத்தில் இவர் ராணியாக நடிக்க அதற்காக தன் தோற்றத்தை மாற்றி வருகின்றார்.
படத்தில் இவருக்கு எப்படியும் கத்திச்சண்டை எல்லாம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இப்படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி வரை இருக்கும் என தெரிகின்றது.
மேலும், இதில் அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கவுள்ளதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா அடுத்த வாரம் கலந்துக்கொள்ளவுள்ளார், அதை தொடர்ந்து விசுவாசம் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளாராம்.