அடி தூள்.! அதிரடி வெற்றி.! அசால்ட்டாக 300 கோடி வசூல் செய்த விக்ரம்.!?

Published by
பால முருகன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

 

படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 2 வாரங்கள் ஆகியும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்திக் கதை மற்றும் திரைக்கதை என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்- அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் சர்தார் பட ஷூட்டிங்!

நாளுக்கு நாள் விக்ரம் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இதைபோல் வசூலிலும் படம் சக்கபோடுபோட்டு வருகிறது. இந்நிலையில், வெளியான நாளிலிருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த படம் தமிழகத்தில் மட்டும் 140 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழில் வெளியான படங்களில் 300 கோடி வசூல் செய்த மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையையும் விக்ரம் படைத்துள்ளது.

இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதற்கு அடுத்த படியாக விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதனையடுத்து 3 வது படமாக 300 கோடி வசூல் செய்த பட்டியலில் கமலின் விக்ரம் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago