ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளர்த்தா, தான் புள்ள தானே வளரும்! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குநருமாவார். இவர் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளியான புதியபாதை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் அவரும் நடித்துள்ளார். இதனையடுத்து, இப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி நல்ல பாராட்டை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு சீனுராமசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானே வளரும் என்று பதிவிட்டிருந்தார், இவரது இந்த பதிவு பலருக்கும் புரியாத புதிராய் இருந்த நிலையில், அந்த பதிவிற்கு கீழ், பொண்டாட்டி என்ற வார்த்தையை புள்ளை என்று வாசிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார்.
“ஊரான் பொண்டாட்டியை ஊட்டி வளத்தா, தன் புள்ள தானே வளரும்”பழமொழி போல… (Sorry Typo mistake பொண்டாட்டி என்ற வார்த்தையை புள்ளை என்று வாசிக்கவும்)திரு சீ ரா, சீராட்டி பாராட்டி மகிழ்வார் என் போன்ற ஊரான்களை! https://t.co/4RNzuMXix2
— R.Parthiban (@rparthiepan) August 16, 2019