மகாராஜா : குரங்கு பொம்மை படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய ‘மகாராஜா’ படம் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இந்த படத்தினை பற்றி தான் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் 50-வது படமான இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கிறது.
ஆனால், முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் சேதுபதி இல்லயாம். முதலில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் நடிக்க இருந்தாராம். முதலில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் வேறொரு தயாரிப்பாளரிடம் படத்தின் கதையை கூறினாராம். பிறகு அந்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியிடம் கதையை கூற விஜய் ஆண்டனியும் கேட்டுவிட்டு கதை ரொம்பவே பிடித்து போய் கண்டிப்பாக படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறினாராம்.
பிறகு, நித்திலன் சுவாமிநாதன் படம் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் முன்னதாகவே பேசி நான் சம்மதம் வாங்கிவிட்டேன் என்று கூறினாராம். இருப்பினும் படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறது என்றும் கூறினாராம். பின் அந்த தயாரிப்பாளர் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு நாங்கள் விஜய் ஆண்டனியை வைத்து படம் செய்கிறோம் இந்த படத்தை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்டார்களாம்.
அதற்கு பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லையாம். இருந்தாலும் இந்த படத்தில் நான் தான் நடிக்கவேண்டும் என்ற உறுதியுடன் விஜய் ஆண்டனி இருந்த காரணத்தால் பேஷன் ஸ்டுடியோஸ் அந்த தயாரிப்பாளரிடம் விஜய் ஆண்டனியை கொடுங்கள் நாங்கள் படம் செய்துவிடுகிறோம் என்று கூறினாராம். அதற்கு அந்த தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்து விஜய் ஆண்டனி எங்களுக்கு 3 படங்கள் கமிட் செய்து இருக்கிறார்.
எனவே, முடியாது என்று கூறினாராம். பிறகு பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நாங்கள் விஜய் சேதுபதியிடம் இந்த படம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் நாங்கள் இந்த படத்தை உங்களுக்கு விட்டு தருகிறோம் என்று கூறினார்களாம். விஜய் சேதுபதி படத்தின் கதையை கேட்டுவிட்டு கதை நன்றாக இருக்கிறது நானே செய்கிறேன் என்று கூறிவிட்டாராம். இதனால் விஜய் ஆண்டனியால் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இந்த தகவலை தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…