தனது மகளுக்காக குரல்கொடுத்த அப்பா! சேரன் – மோகன் வைத்யா இடையே மோதல்!
நடிகர் கமலஹாசனானால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இருந்து எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இவர்கள் மூன்று பெரும் இணைந்து லொஸ்லியாவிற்கு பச்சோந்தி என்ற அவார்ட்டை வழங்கியுள்ளனர். இதனையடுத்து கோவம் கொண்ட லொஸ்லியா அதனை தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மற்றும் லொஸ்லியா இருவரும் தந்தை-மகள் உறவுடன் தான் பழகுகின்றனர். இந்நிலையில், சேரன் லொஸ்லியாவிற்காக, மோகன் வைத்யாவிடம் பேசுகிறார். அவர் பேசுகையில், நீங்கள் காரணம் சொல்லாமல் வார்த்தை கொடுத்தாதது தவறு என்ற குற்றசாட்டை முன் வைக்கிறார்.