நாளை காலை நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் வெளியீடு!கொண்டாட உள்ள ரசிகர்கள்!
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கபடுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவர் நடிப்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் ஹிந்தியில் பிங்க் என்று வெளியான படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்தில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே போன்ற பலர் நடித்துள்ளனர்.இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பாடலான வானில் இருள் என துவங்கும் பாடல் நாளை காலை 7.45 மணியளவில் வெளியாக உள்ளது என யுவன் தனது இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இதை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றன.
A beautiful melody is coming your way! #VaanilIrul, 1st song from #NerKondaPaarvai will be out tomorrow at 7.45 AM.Sung by dhee and lyrics by @Poet_Umadevi_3 @ZeeStudiosInt #AjithKumar #HVinoth @BoneyKapoor #BayViewProjects pic.twitter.com/LuPGPIXGcV
— Raja yuvan (@thisisysr) June 26, 2019