rohini theatre And Vijay [file image]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வெளியானது. படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற காரணத்தால் படத்தின் ட்ரைலராவது ரசிகர்கள் பிரமாண்டமாக பார்த்து ரசிக்கவேண்டும் என பல பெரிய திரையரங்குகளில் வெளியே திரை வைத்து ட்ரைலர் காட்சிப்படுத்தப்பட்டது.
அதைப்போலவே, திரையரங்குகளுக்கு உள்ளேயும் டிரைலர் போடப்பட்டது. அந்த வகையில், டிரைலர் காண சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது என்றே கூறலாம். டிரைலரை பார்த்தது மட்டுமின்றி திரையரங்குகளில் இருந்த இருக்கைகளை எவ்வளவு சேதப்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தினார்கள்.
ஏற்கனவே லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவில்லை என்ற காரணத்தால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இதன் காரணமாக கோபத்தில் சம்மபந்தமே இல்லாமல் திரையரங்கு இருக்கைகளை சேதம் செய்த்துவிட்டு வெளியே வந்து இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை என்றால் இப்படி தான் என்பது போல சில ரசிகர்களும் பேசி இருந்தார்கள்.
விஜய் ரசிகர்கள் இப்படி திரையரங்குகளின் இருக்கைகளை சேதப்படுத்தியது குறித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பிரபல தயாரிப்பாளரான டி.சிவா பேட்டி ஒன்றில் விஜயின் உண்மையான ரசிகர்கள் யாரும் இப்படி செய்யமாட்டார்கள் எனவும் காட்டத்துடன் பேசி இருந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விஜய்க்கு தகவல் தெரிவிக்க விஜய் இந்த சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளாராம். வேதனையுடன் ரோகினி திரையரங்கின் உரிமையாளரை நேரில் அழைத்துள்ளாராம். நேரில் அழைத்து இந்த சம்பவம் குறித்து பேசி அதற்கான தொகையை அவரும் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் விஜய்யை அனைவர்க்கும் பிடிக்கிறது என புகழந்து தள்ளி வருகிறார்கள்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…