மணப்பெண் கோலத்தில் ராஷ்மிகா…போஸ்டரை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார்.
இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 8-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தற்போது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 15 ஆகஸ்ட் 2024 அன்று வெளிவர உள்ளது.
புஷ்பா 2
படத்தில் ஃபகத் பாசில், ரஷ்மிகா மந்தனா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், அனசூயா பரத்வாஜ், ராவ் ரமேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த பெரிய பட்ஜெட் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.