மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் லோகேஷ்.! தளபதி 67க்கு ரசிகர்கள் மரண வெய்டிங்…..
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே விஜயின் 67-வது படத்தை இயக்குவதாக தகவல்கள் பரவி வருகிறது.
விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜிடம் பல பேட்டிகளில் கேட்டபோது தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அதுவரை காத்திருங்கள் என்று தெரிவித்தார். இதற்கு முன்பு விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் 50% விஜய் படமாகவும், 50% லோகேஷ் படமாகவும் உருவானது.
ஆனால், இருவரும் மீண்டும் இணைந்தால் முழுக்க முழுக்க படம் 100% லோகேஷ் படமாக உருவாகும் என்று லோகேஷ் கனகராஜே தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தளபதி 67 அறிவிப்பு எபோட்றது வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ள நிலையில், ஒரு அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
ஆம், விக்ரம் படத்தின் வெற்றியை நேற்று படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள் அப்போது ரசிகர்கள் அனைவரும் தளபதி 67 என்று கத்தினார்கள்.
It is Confirmed ???????? #Thalapathy67 ???? Sambavam Loading ????????❤️!! @actorvijay pic.twitter.com/aSULDXq4bj
— Vɪᴠɪɴ VJ ???? (@Master_Vivin) June 13, 2022
இதனை பார்த்த லோகேஷ் கையை ஓகே என்று சொன்னவாறு அசைத்து விஜய் படத்தை இயக்குவதை உறுதிசெய்துள்ளார். வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.