நடிகர் தீபக் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !
தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் மற்றவர்களுக்கு நிறைய வகையில் உதவி வருகின்றனர். விஜய், அஜித், ரஜினி, கமல் என இவர்களை தாண்டி மற்ற பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சிலரின் படிப்பிற்கோ, சாப்பாட்டிற்கோ உதவுகின்றனர்.
ஒருசிலர் செய்யும் பணிகள் வெளிவரும். அப்படி பள்ளி குழந்தைகளுக்காக தானே பிரியாணி சமைத்து, பரிமாறி பள்ளி குழந்தைகளுடனேயே உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார் பிரபல நடிகரும், தொகுப்பாளருமான தீபக் . அவர் செய்த அந்த செயலை பிரபல தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்ப இருக்கின்றனர்.
நிகழ்ச்சிக்காக வந்த புரொமோவை தீபக் தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்ய ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.