இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த திரைப்படம் பூவே உனக்காக படத்தைப் போல காதல் கதையை மையமாக வைத்து படம் உருவாகும் என முன்னதாகவே தகவல்கள் பரவி வந்தது. இதற்கிடையில், தற்போது ரசிகர்களை ஏமாற்றமடையும் மாறு படத்தில் ஒரு விஷயம் இல்லயாம்.
அது என்னவென்றால், வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களில் சண்டைகாட்சிகள், பாடல்கள்,வசனங்கள் என பல இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் கிடையாதாம். நண்பன் பட பாணியில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நண்பன் படத்தில் சண்டை காட்சிகள் இருக்காது. ஆனால் படம் செம ஹிட்டானது. தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்திலும் சண்டைக் காட்சிகள் இல்லை என்பதால் சில ரசிகர்கள் சோகமாக இருந்தாலும், சில ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகிவிட்டனர்.
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…