நடிகை சோனியா அகர்வாலின் தற்போதைய நிலை.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
ஒரு காலகட்டத்தில் சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை சோனியா அகர்வால். இவர் நடித்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை ஆகிய படங்களின் இவருடைய கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்படுகிறது.
தமிழில் மட்டுமில்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட போன்ற மொழிகளிலும் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவர் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்களேன்- கன்னத்தில் முத்தம்.. காலில் முத்தம்.! ப்ரோமோஷனுக்காக அடிமட்ட லெவலுக்கு இறங்கிய பிரபல இயக்குனர்.!
இதற்கிடையில் அவ்வபோது, தான் எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம சோனியா அகர்வாலா இது..? என அதிர்ச்சியுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
@soniya_agg latest #Soniaagarwal pic.twitter.com/fpUn7buqbZ
— CineBloopers (@CineBloopers) December 9, 2022
மேலும் நடிகை சோனியா அகர்வால் தற்போது, காதலை தேடி நித்ய நந்தா என்ற திரைப்படத்திலும், ஷ்ஷ்ஷ் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.