ரசிகர்கள் கையால் வெளியிடப்பட்ட சர்கார் படத்தின் பாடல்கள்…!மகிழ்ச்சியில் தளபதி விஜய் ரசிகர்கள் …!
விஜய் ரசிகர்கள் தங்களது கைகளால் வெளியிட்ட சர்கார் படத்தின் பாடல்கள்.
முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். இந்த படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்றது .இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதிமாறன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ரகுமான் இசையமைத்து வெளியிடப்பட்ட 2 பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்நிலையில் மீதமுள்ள பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.
டிஜிட்டல் தொழில்நுட்பமுறையில், அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான www.sarkar.sunpicturs.in மூலம், விழாவில் கூடியிருந்த விஜய் ரசிகர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மொபைல்போன்களின் மூலம் அனைத்து பாடல்களையும், விஜய் ரசிகர்கள் தங்களது கைகளால் வெளியிட்டனர். இந்த முயற்சி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த இணையதளத்தில் அனைத்துப் பாடல்களும் இருக்கின்றன.