தனுஷ் : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது புதிதான விஷயம் இல்லை. அப்படி வதந்தியான தகவல்கள் பரவும்போது அதற்கு பிரபலங்கள் சூசகமாக பதில் அளித்துவிடுவார்கள். அப்படி தான் நடிகர் தனுஷ் தற்போது தன்னை பற்றிய பரவிய விமர்சனங்கள், வதந்திகள் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூசகமாக பேசியுள்ளார்.
தனுஷ் பற்றி பாடகி சுசித்ரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் தனுஷ் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது அதைப்போல, தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது பற்றியும் தனுஷ் புதிதாக வீடு ஒன்றையும் போயஸ் கார்டன் பகுதியில் கட்டிய வீடு பற்றியும் பல வதந்தி தகவல்கள் பரவியது.
இதனை பற்றி எல்லாம் கவலை படாதா தனுஷ் தன்னுடைய வேளையில் மட்டும் கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார். அவருடைய 50-வது படமான ராயன் வரும் ஜூலை 26-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தனுஷ் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.
ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதாவது ” என்னை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றாக தெரியும். அதைப்போல என்னுடைய ரசிகர்களுக்கு என்னை பற்றி நன்றாகவே தெரியும். எனக்கு பல அவமானங்கள் நடந்தாலும் இன்னுமும் நான் இப்படி உங்களுடைய முன்னாள் வந்து நிற்பதற்கு காரணமே நீங்கள் தான்” என்று கூறினார்.
மேலும் பேசிய தனுஷ் “நான் யாருடைய ரசிகன் என்பது உங்களுக்கே தெரியும். என்னுடைய 16 வயதின் நான் ஒருமுறை போயஸ் கார்டனுக்கு சென்று கொண்டிருந்த சமயத்தில் ரஜினி சாருடைய வீட்டை பார்த்தேன். பிறகு அங்கிருந்த போலீசாரிடம் கெஞ்சிவீட்டிற்குள் பார்க்க ஆசைப்பட்டேன், ஆனால் பார்க்க முடியவில்லை. பிறகு அருகில் கூட்டமாக இருந்தது அதனை பார்த்துவிட்டு யார் வீடு என்று என்னுடன் வந்தவரிடம் கேட்டேன்.
அவர் என்னிடம் இது தான் ஜெயலலிதா அவர்களுடைய வீடு என்று சொன்னார். எனவே, அப்போது என்னுடைய மனதில் போயஸ் கார்டனில், ஒரு சின்ன வீடாவது கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவின் ஆசைக்கு, தனுஷ் கொடுத்த கிஃப்ட் தான் போயஸ் கார்டனில் நான் கட்டிய அந்த புதிய வீடு” எனவும் வீடு குறித்து பரவிய புரளிக்கும் தனுஷ் முற்றுப்புள்ளி வைத்தார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…