என்னை பற்றி ரசிகர்களுக்கு தெரியும்….சர்ச்சைகளுக்கு தனுஷ் வைத்த முற்றுப்புள்ளி!!

தனுஷ் : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது புதிதான விஷயம் இல்லை. அப்படி வதந்தியான தகவல்கள் பரவும்போது அதற்கு பிரபலங்கள் சூசகமாக பதில் அளித்துவிடுவார்கள். அப்படி தான் நடிகர் தனுஷ் தற்போது தன்னை பற்றிய பரவிய விமர்சனங்கள், வதந்திகள் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராயன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூசகமாக பேசியுள்ளார்.
தனுஷ் பற்றி பாடகி சுசித்ரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் தனுஷ் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது அதைப்போல, தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது பற்றியும் தனுஷ் புதிதாக வீடு ஒன்றையும் போயஸ் கார்டன் பகுதியில் கட்டிய வீடு பற்றியும் பல வதந்தி தகவல்கள் பரவியது.
இதனை பற்றி எல்லாம் கவலை படாதா தனுஷ் தன்னுடைய வேளையில் மட்டும் கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார். அவருடைய 50-வது படமான ராயன் வரும் ஜூலை 26-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தனுஷ் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.
மேலும் பேசிய தனுஷ் “நான் யாருடைய ரசிகன் என்பது உங்களுக்கே தெரியும். என்னுடைய 16 வயதின் நான் ஒருமுறை போயஸ் கார்டனுக்கு சென்று கொண்டிருந்த சமயத்தில் ரஜினி சாருடைய வீட்டை பார்த்தேன். பிறகு அங்கிருந்த போலீசாரிடம் கெஞ்சிவீட்டிற்குள் பார்க்க ஆசைப்பட்டேன், ஆனால் பார்க்க முடியவில்லை. பிறகு அருகில் கூட்டமாக இருந்தது அதனை பார்த்துவிட்டு யார் வீடு என்று என்னுடன் வந்தவரிடம் கேட்டேன்.