பஞ்சாப்பின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா நேற்று பஞ்சாபின் மன்சா என்ற கிராமத்தில் அடையாளம் தெரியாத கும்பல்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் அவரின் இரண்டு நண்பர்கள் காயமடைந்தனர். சித்து மூஸ்வாலா தனது இரண்டு நண்பர்களுடன் தனது கிராமத்திற்கு செல்லும் வழியில் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவர் சென்ற கார் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் சிதறி கிடந்துள்ளது. காயமடைந்த அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பல அசத்தலான பாப் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த சித்து மூஸ் வாலா பாடகர் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் காட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து, 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மன்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
விஐபி கலாச்சாரத்தை முறியடிக்கும் வண்ணம் பஞ்சாப், பகவந்த் மான் அரசு சித்து மூஸ் வாலா உட்பட 424 விஐபிக்களின் பாதுகாப்பை திரும்ப பெற்றது. பாதுகாப்பை திரும்ப பெற்ற மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.. இவரது மறைவுக்கு ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…