நாளை “பீஸ்ட்” அப்டேட்.? நெல்சன் ட்வீட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்,!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டீசர்,டிரைலர் குறித்த எந்த அப்டேட்டும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ட்வீட்டர் பக்கத்தில் “நாளை” என ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். கண்டிப்பாக நாளை பீஸ்ட் படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே படத்திலிருந்து வெளியான அரபிகுத்து பாடல் மற்றும் ஜாலியா ஜிம்கானா பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நெல்சன் இப்படி ஒரு ட்வீட் செய்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பீஸ்ட் அப்டேட் நாளை வெளியாகும் என காத்துள்ளார்கள். நாளை அப்டேட் வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளை…
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022