யோகிபாபுவிற்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்
யோகிபாபு தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் யோகி, யாமிருக்க பயமேன், காக்கிசட்டை, ரெமோ, மான்கராத்தே, ஜாக்சன்துரை,கோலமாவு கோகிலா என பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
மேலும் இவர் சமீபத்தில் வெளி வந்த விஸ்வாசம், சர்கார் என பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பல் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் பட்டிபுலி படம் இன்று வெளியாக இருக்கிறது.எனவே இவரது ரசிகர்கள் இன்று ரோகினி தியேட்டரில் இவரின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய இருக்கிறார்கள்.