ஜாலியா ஜிம்கானா வீடியோ பாடல் வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் படத்துக்கு எப்படி வந்தாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் 230கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற விஜய் ஜாலியா ஜிம்கானா என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றியிருந்தது. இதற்கான வீடியோ பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது.
The much-awaited video song of #JollyOGymkhana is here!
▶ https://t.co/rygMCYPnHz@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @kukarthik1 @AlwaysJani @valentino_suren @alagiakoothan #JollyOGymkhanaVideoSong #Beast
— Sun Pictures (@sunpictures) May 2, 2022