விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் அப்டேட் கேட்டுள்ளனர்.
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் . மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
READ MORE – விண்ணை தாண்டி வருவாயா ‘வாய்ப்பு போச்சு ரொம்ப நொந்துட்டேன்’- ஜனனி வேதனை!
பொதுவாக அஜித் படம் என்றால் விரைவில் அப்டேட் வெளியாகாது, அதற்கு எடுத்துக்காட்டாக வலிமை திரைப்படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதே நிலைதான் தற்போது விடாமுயற்சி படத்திலும் நிலவி வருகிறது.
READ MORE – Raayan: இன்னும் யாரெல்லாம் இருக்காங்க? மிரட்டும் தனுஷின் ‘ராயன்’ காஸ்ட்.!
ஆம், வலிமை படப்பிடிப்பின் போதும் முடிந்த பிறகும் படத்தின் அப்டேட் ஒன்று கூட வெளியாகவில்லை. இதனால், அப்செட் ஆன ரசிகர்கள் செல்லும் இடத்தில் எல்லாம் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர். அந்த வரிசையில், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கி லடாக் வரை சென்றது.
READ MORE – Kenneth Mitchell : ‘கேப்டன் மார்வெல்’ பட நடிகர் கென்னத் மிட்செல் காலமானார்.!
அது போல, புதுச்சேரியில் அஜித்தின் வாலி திரைப்படம் ரீரிலீஸ் ஆன நிலையில், தியேட்டர் முன் அஜித் ரசிகர்கள், லைக்காவை காணவில்லை.. விடாமுயற்சி டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. படத்தோட அப்டேட் என்னாச்சு.. கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழக்கப்படும் என எழுதப்பட்டிருக்கும் பேனரை வைத்து நூதன முறையில் அப்டேட் கேட்டனர்.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…