Ajith kumar: சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் நேற்று வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்ததாகவும், இதனையடுத்து நடந்த 4 மணிநேர தீவிர அறுவை சிகிச்சையில், மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சைக்காக மதுரை மற்றும் கேரளாவில் இருந்து 2 மருத்துவர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நேற்றைய தினம் அவர், வழக்கமான உடல்நல பரிசோதனையை முடித்துக்கொண்டு மாலை வீடு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் எப்படி மாலை வீடு திரும்பிருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொதுவாக, அஜித் குறித்து ஏதாவது வதந்தி மற்றும் சர்ச்சைகள் பரவினாலோ அல்லது அஜித் அதிகார்பூர்வமாக ஏதேனும் அறிவிக்க விரும்புகிறார் என்றால், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள மூலம் வெளிடுவார். இந்த நிலையில், அஜித்தின் உடல் நலம் குறித்து நேற்றைய தினத்தில் இருந்து இப்போது வரை மவுனம் காத்து வருகிறார். இதனால், அஜித்தின் உடல் நலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். மேலும், அறுவை சிகிச்சை செய்தி உணமையாக இருக்க கூடாது, வதந்தியாக இருக்க வேண்டும் என வேண்டி வருகிறார்கள்.
இதற்கிடையில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இப்பொது சென்னையில் இருக்கும் அவர், படப்பிடிப்புஅஜர்பைஜானில் நடந்து வந்து வரும் நிலையில், வருகின்ற 15 ஆம் தேதி விடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…