தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் அதிரடி டிரெய்லர் நேற்று வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திரையில் நடிகர் விஜய் இதுவரை இல்லாத அவதாரத்தில் காண்பித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
நடிகர் விஜய் கேரியரில் இது மிகப்பெரிய படம் என்றும், இப்படம் இதுவரை இல்லாத வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று வெளியான ட்ரெய்லரில் விஜய் நடித்திருக்கும் நடிப்பை ஒரு பெரிய எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.
ட்ரெய்லரில் இடடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகள், ரத்தம் தெறிக்க…அனல்பறக்கும் காட்சிகள் என அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. முக்கியமாக, சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட ஹைனா காட்சிகள் பிரமிக்க வைத்தது.
மேலும், விஜய் இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்று பார்த்தி மற்றொன்று லியோ தாஸ் இது அண்ணன் – தம்பி கதாபாத்திரமா தந்தை – மகன் கதாபாத்திரமா என்று தெரியவில்லை.
இதற்கெல்லாம் விடை படம் திரையரங்கில் வெளியாகும்பொழுது, தெரிந்துவிடும். லியோ அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ட்ரெய்லர் சிலருக்கு ‘disappointed’ நம்பியதும், எதிர்பார்த்ததும் இல்லாத தருணத்தை ஏற்படுத்தியுள்ளதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆம்… லோகேஷ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கப்போவதாக அறிவித்த நாளிலிருந்தே லியோ LCU-க்குள் இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இதனால், இந்த படத்தின் பிசினஸ் பயங்கர ஹைப்-ஐ ஏற்படுத்தியது.
இப்படி பயங்கர எதிர்பார்ப்பை உண்டாக்கிய இந்த படத்தின் ட்ரெய்லரில் துளி கூட LCU-க்குள் நுழையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவே இல்லை. முழுக்கு முழுக்க விஜய் நடிக்கும் படம் என்றும், லோகேஷின் இயக்கம் என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஒருவேளை திரையரங்கில் வெளியான பிறகு, இதற்கு விடை கிடைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறையும் லோகேஷ் பொதுவிழாவில் கலந்து கொள்ளும்போதெல்லாம், LCU பற்றி வாயை திறக்காமல் சென்று விடுவார்.
ஒரு சில இடங்களில், இது முழுக்கு முழுக்கு என்னுடைய படம் என்றே தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல், இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறார். எப்படி இருந்தாலும், ட்ரெய்லர் LCU-க்குள் வராததால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…