ஆசையை காட்டி மோசம் பண்ணிட்டீங்க…சிக்கந்தர் பார்த்துவிட்டு கதறும் ரசிகர்கள்..டிவிட்டர் விமர்சனம் இதோ!

சல்மான் கான் நடிப்பில் வெளியான சிக்கந்தர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

sikandar

சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் நிச்சயமாக ஏ.ஆர்.முருகதாசிற்கு கம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்களை பெறவில்லை என்பது ரசிகர்களுக்கும் படக்குழுவுக்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே, சிக்கந்தர் படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்தி இருந்தது. டிரைலரை வைத்து பார்க்கையில் படம் நிச்சியமாக பெரிய சம்பவம் செய்யபோகிறது என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள்.

படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த பலரும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கூறிவருவதால் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்து வரும் விமர்சனங்களை பற்றி பார்ப்போம்.

படத்தை பார்த்த ஒருவர் ” படம் பார்த்த முதலில் இருந்தே கதை சரியாக இல்லை. படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்புகளும் சரியாக இல்லை. சல்மான் கான் ரசிகர்கள் மட்டும் படத்தை பார்த்துக்கொள்ளலாம். மற்றபடி எனக்கு படம் பிடிக்கவில்லை” எனவும் கூறியுள்ளார்.


மற்றொருவர் “சிக்கந்தர் வெறும் படம் மட்டுமல்ல; அது உங்களுடன் என்றும் நிலைத்திருக்கும் ஒரு அனுபவம். உள்ளே நுழைந்து அந்தக் காட்சியைக் கண்டு மகிழுங்கள்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “சிக்கந்தர் படத்தின் கதை சில இடங்களில் மாற்றப்பட்டது படம் பார்க்கும்போது தெரிகிறது. ஆனால் எழுதப்பட்ட திரைக்கதை முழு காட்சியையும் அழித்துவிட்டது” எனவும் கூறியுள்ளார்.

மற்றொருவர் ” சிக்கந்தர் படத்திற்கு அதிகப்படியான விமர்சனங்கள் வருவதாக எனக்குத் தோன்றுகிறது, இது மிகச்சிறந்த படம் இல்லை, ஆனால் மிகவும் மோசமாகவும் இல்லை, இது ஒரு நல்ல வேடிக்கையான பொழுதுபோக்கு, ஒரு முறை பார்க்கலாம். ஆனால், விமர்சனம் வரும் அளவுக்கு மோசமாக இல்லை” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “சிக்கந்தர் படம் மிகவும் மாஸாக இருக்கிறது. விமர்சகர்களுக்கு தான் பிடிக்கவில்லை. சில இடங்களில் சொதப்பினாலும் சல்மான் கான் படத்தை கடைசி வரை போர் அடிக்காமல் கொண்டு சென்றிருகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire