SK family [file image]
சிவகார்த்திகேயன் : சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆராதனா என்று பெயர் வைக்கப்பட்டது. வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி பிரபலமான அவர் தற்போது பெரிய பொன்னாக வளர்ந்து பள்ளிக்கூடம் படித்து கொண்டு இருக்கிறார்.
ஆராதனாவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் அறிவித்தும் இருந்தார். இதனையடுத்து, சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதி மூன்றாவது குழந்தைக்கு பெற்றோர்கள் ஆகவுள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரசிகர் மன்ற தலைவர் ஒருவரின் பிறந்த நாள் விழாவிற்கு சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சென்று இருந்தார். அப்போது தான் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியவந்துள்ளது. சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் கலந்து கொண்ட இந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 23-வது படம் என மிகவும் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…