ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல டாப் நடிகை..? அனல் பறக்கும் ‘பையா 2’ அப்டேட்.!
கடந்த 2010-ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பையா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், ஆனால் இந்த இரண்டாவது பாகத்தில் கார்த்தி நடிக்கமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் கூறப்பட்டது.
மேலும், முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தை மிகவும் பிரமாண்டமாக எடுக்க லிங்கு சாமி திட்டமிட்டிருக்கிறாராம். எனவே இந்த இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பை படக்குழு வெளிநாடுகளில் சென்று எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த பையா 2 திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி பையா 2 திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகையான பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளாராம்.
ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்தால் கண்டிப்பாக இவர்களுடைய ஜோடி நன்றாக தான் இருக்கும். மேலும் பையா 2 படத்திற்கு முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கிறார். மேலும் முதல் பாகத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.