‘ஏகே 63’ திரைப்படத்தை தயாரிக்க களமிறங்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்.!

AK63

அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த…அந்தா…என்று ஒரு வழியாக அண்மையில் விடாமுயற்சி படக்குழு அஜர்பைஜானில் தொடக்கி இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. பிரம்மாண்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் தவிர த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் நபீஸ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மார்க் ஆண்டனி என்ற வெற்றி படத்தை வழங்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘ஏகே 63’ படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த பிறகு அஜித்துடன் நெருக்கமாக இருந்து வாருகிறார். அஜித்துக்கு ஏற்றவாரு கொலையாளி போன்ற ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வன்முறை – தந்தை பாசமும் கலந்து மிரட்டும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ டிரைலர்!

ஆதிக்கின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இந்த படத்திலும் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், பிறபல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘ஏகே 63’ படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்போம். ஏற்கனவே, மைத்ரி மூவி மேக்கர்ஸ், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ போன்ற பெரிய படங்களை வழங்கியுள்ளது.

புத்தாண்டு அன்று வெடிக்கும் ‘தளபதி 68’ டைட்டில்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்!

இந்நிறுவனம் தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’, தேஜா நடித்த ‘RT4GM’ மற்றும் ‘புஷ்பா 2’ ஆகியவற்றை தயாரித்து வெளியிட தயராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை இந்த  தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்