3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்! பாடகி பிரியங்கா சிங் பகீர் தகவல்!
ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் பல பாடல்களை பாடியதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பாடகி பிரியங்கா சிங். இவர் பிக் பாஸ் சீசன் 5 தெலுங்கு சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது தான் தற்கொலைக்கு முயற்சி செய்த தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய பிரியங்கா சிங் ” என்னுடைய சிறுவயதில் அக்கா பள்ளியிலிருந்து வரும் போது அவர் அணிந்திருக்கும் ஆடைகளை பார்க்கும்போது எனக்கு ஒரு பெண்ணாக இருக்க விருப்பம் வந்தது. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஹைதராபாத் வந்தேன். ஜபர்தஸ்த் ஷோவில் லேடி கெட்அப் போட்டு கொண்டு நடித்தேன். அதன் மூலம் எனக்கு பணமும் கிடைத்தது.
படங்கள் எல்லாம் தொடர் தோல்வி! வெற்றிப்பாதைக்கு திரும்ப நயன்தாரா எடுத்த முடிவு!
அந்த பணத்தில் தான் நான் அறுவை சிகிச்சை செய்தேன். அப்போது நான் கடுமையான வலியால் அவதிப்பட்டேன். மருத்துவமனையில் கவனிப்பவர்கள் எனெக்கென்று யாரும் இல்லை. அறுவை சிகிச்சை செய்து மீண்டு வருவதற்குள் மூட்டுவலியால் ஒரு வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன். அதெல்லாம் ஒரு கட்டத்தில் தாண்டிய பிறகு என்னுடைய குடும்பத்தில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது.
நான் என் வாழ்க்கையில் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறேன். 10ம் வகுப்புக்கு பிறகு கிராமத்துல எல்லாரும் சொன்னதையே அப்பா சொன்னதும் என்னால் தாங்க முடியல. பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன். கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை தோல் எரிந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.
பின்னர் நான் காதலில் தோல்வியடைந்தபோதும் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டேன். அதன்பிறகு அறுவை சிகிச்சை முடிந்து மூட்டுவலி வந்தபோது அந்த வலியை தாங்க முடியாமல் என்பதால் மீண்டும் தூக்க மாத்திரை சாப்பிட்டேன். இப்படியெல்லாம் செய்தும் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். இது கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்கிறேன்” எனவும் பிரியங்கா சிங் வேதனையுடன் கூறியுள்ளார்.