பிரபல பாடகி பிரபா ஆத்ரே மாரடைப்பால் காலமானார.!
புகழ்பெற்ற பாடகி பிரபா ஆத்ரே (92) இன்று காலை மாரடைப்பால் காலமானார். பிரபல கிளாசிக்கல் பாடகி புனேவில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவில் நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்கு பின், அவர் அதிகாலை 5.30 மணியளவில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்ற “கிரானா கரானா” இசை பள்ளியைச் சேர்ந்த இவர், இந்திய அரசின் உயரிய விருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார். 1932–இல் பிறந்த ஆத்ரே, இசை கற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்து, இசைத்துறைக்குள் நுழைந்து அதில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!
பிரபா அத்ரே பன்முகத் திறமைகள் கொண்டவர் என்றே சொல்லலாம். அவர் ஒரு கிளாசிக்கல் பாடகி மட்டும் இல்லாமல், ஒரு கல்வியாளர், ஆராய்ச்சியாளர், இசைக்கலைஞர் மற்றும் எழுத்தாளர் என்று இவற்றில் சிறந்து பணியாற்றினார்.
மூன்று பத்ம விருது
ஜனவரி 2022 இல் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002-ம் ஆண்டு பத்மபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.