மூளையில் ரத்தக்கசிவு.! பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி…
பிரபல கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு தகவல்களின்படி, அவர் இங்கிலாந்த் லிவர்பூலில் உள்ள ஒரு ஹோட்டலில் மயங்கிய நிலையில் காணப்பட்டார், பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு மருத்துவமனையில் ‘கீ ஹோல்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, விரைவில் பூரண குணமடைந்தவுடன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்று நம்பப்படுகிறது.
பாம்பே ஜெயஸ்ரீ தனது மெல்லிசை மற்றும் தியானப் பாடலுக்கு பெயர் பெற்றவர். இதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். மீபத்தில், பாம்பே ஜெயஸ்ரீக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதாக அறிவித்தது மியூசிக் அகாடமி .