பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை.! சோகத்தில் ரசிகர்கள்.!

Default Image

ஏகேஏ என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க ராப்பர் கீர்னன் ஜாரிட் ஃபோர்ப்ஸ் வெள்ளிக்கிழமை இரவு டர்பனில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரபல தென் ஆப்பிரிக்கா ரேப் சிங்கர் எகேஎ (AKA) பல ரேப் பாடல்களை பாடியுள்ளார். இவர், நேற்று இரவு புளோரிடாவில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது. சில மர்ம நபர்களால்  சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நேற்று இரவு 10 மணிக்கு நடைபெற்றதாகவும், இதில் ஏகேஏவைத் தவிர, அவரது மெய்க்காப்பாளரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார், மேலும் ராப்பரின் மற்றொரு நெருங்கிய நண்பர் ஒருவரும் சுட்டு கொல்லப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல ஹிட் பாடல்களை படி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த ஏகேஏ (AKA) சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ஏகேஏ கேப் டவுனில் பிறந்து வளர்ந்தார் மற்றும் 2011 இல் அவரது முதல் ஆல்பமான ஆல்டர் ஈகோவில் இடம்பெற்ற அவரது ஒற்றை “விக்டரி லேப்” வெளியீட்டின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்