Mani Ratnam : மணிரத்னம் மனுஷனே இல்லை என பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களை பற்றி மற்ற பிரபலங்கள் பெருமையாக பேசுவது போல ஒரு சில பிரபலங்கள் விமர்சித்து பேசுவதும் உண்டு. அந்த வகையில் வேட்டையாடு விளையாடி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் முன்னணி இயக்குனரான மணிரத்தினத்தை பற்றி விமர்சித்து பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியில் பேசிய மாணிக்கம் நாராயணன் ” இயக்குனர் மணிரத்தினத்தை பற்றி பேசவே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 60 வயதில் அவருக்கு கொஞ்சம் கூட பக்குவம் இல்லை. அவரால் நான் நஷ்டம் அடைந்து இருக்கிறேன். பிறகு உதவிக்காக எனக்கு ஒரு படம் கொடுத்து என்னை தூக்கிவிட கேட்டு அவரை சந்திக்க சென்றால் வாட்ச்மேனை விட்டு இப்போது பார்க்க முடியாது என்று கூறிவிடுவார்.
பிறகு போன் செய்துவிட்டு இந்த படத்தை நாங்கள் ஏற்கனவே வேறொரு தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டோம் என்று கூறுவார். அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் போது எங்களுக்கு உதவுவதில் என்ன தவறு இருக்கு? என்னை பொறுத்தவரை மணிரத்தினத்திற்கு கொஞ்சம் கூட மனிதாபி மானமே இல்லை. மனுஷனே இல்லை என்று தான் சொல்வேன்.
நிறைய படங்கள் எடுத்து 50 கோடி 100 கோடி சம்பாதிக்கிறார் சம்பாதித்துவிட்டு போகட்டும் அதில் எனக்கு ஒன்றும் பொறாமை இல்லை. அதே சமயத்தில் அவர் மட்டும் சம்பாதிக்காமல் மற்றவர்களை சம்பாதிக்க வழிவிடவேண்டும். மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி எனக்கு நன்றாகவே தெரியும். அடிக்கடி நானும் அவரும் படங்களை பற்றி பேசிக்கொள்வோம்.
ஆனால், நான் அவருடைய கணவர் மணிரத்தினத்தை பற்றி பேசியதில் இருந்து எனக்கு அவர் கால் செய்யவும் இல்லை நான் கால் செய்தாலும் எடுக்கவே இல்லை. அவருக்கும் என் மீது அவருடைய கணவரை பற்றி பேசியதால் வருத்தம் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்காக உண்மையை பற்றி பேசாமல் என்னால் இருக்க முடியாது” எனவும் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிரத்தினத்தை பற்றி இவர் பேசி இருப்பது சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…