3-வது முறையாக கிராமி விருதை வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்.!
3வது முறையாக கிராமி விருதை வென்றார் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்.
பெங்களூருவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3-வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த விழாவில் தனது டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக ரிக்கி கேஜ் இந்த கிராமி விருதை வென்றுள்ளார்.
‘டிவைன் டைட்ஸ் வித் ராக் – லெஜெண்ட் கோப்லேண்ட்’ என்ற ஆல்பத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரிக்கி கேஜ் கடந்த 2015-ஆம் ஆண்டும், 2022-ஆம் ஆண்டும் கிராமி விருதை வென்றார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.