பிரபல இந்திய படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற வில்லையாம் !!!
ரீமாதாஸ் இயக்கிய அஸ்ஸாமி படம் ‘ வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ் ‘ இந்த படம் தேசிய விருது பெற்ற படமாகும். மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு 9 படங்கள் இடம் பெற்றிருந்தது. ஆனால் ‘ வில்லேஜ் ராக் ஸ்டார்ஸ் ‘ அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
எனவே இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதை போல் கடந்த வருடம் மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய இந்திய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.