கோலிசோடா 2.O-வில் இணையும் பிரபல இயக்குனர்.! யார் தெரியுமா.??

பசங்க திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் அனைவரும் பாடத்தை தொடர்ந்து அடுத்ததாக இணைந்து “கோலி சோடா” படத்தில் நடித்திருந்தார்கள். இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் கோலிசோடா இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் முதல் பாகத்தின் அளவு இல்லாததால் படம் அந்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. வசூலும் அந்த அளவிற்கு செய்யவியலை.
இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் விஜய் மில்டன் கோலிசோடா 2.O என ஒரு வெப்சீரிஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த வெப் சீரிஸில் இயக்குனர் சேரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இயக்குனர் சேரன் இந்த வெப்தொடரில் நடிப்பது மட்டுமில்லாமல் மற்றோரு வெப் தொடரை இயக்கவும் உள்ளார். அவர் இயக்கும் அந்த வெப் தொடரில், பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் விரைவில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024