Rajakumaran about vikram [file image]
நடிகர் விக்ரம் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் சரி, எந்த மாதிரி கெட்டப் போட்டுகொண்டு நடிக்கவேண்டும் என்றாலும் சரி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார் என்றே கூறலாம். இவருடைய நடிப்பை பற்றி சொல்லிதான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு நடிப்பு இலக்கணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு க்ளோசப் ஷாட் வைத்தால் எப்படி நடிக்க வேண்டும் என்று கூட தெரியாது எனவும் அவரை நான் ஒரு சிறந்த நடிகர் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் எனவும் பிரபல முன்னணி இயக்குனரான ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சூர்யா படத்தில் இருந்து விலகிய நஸ்ரியா? அதிதி ஷங்கருக்கு அசத்தல் வாய்ப்பு!
இது குறித்து பேசிய இயக்குனர் ராஜகுமாரன் ” என்னைப்பொறுத்தவரை விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்பதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், விக்ரமால் தன்னுடைய கெட்டப்களை மாற்றி மாற்றி வேண்டுமானால் நடிக்க முடியும். உடல் எடையை அதிகரித்து மற்றும் குறைத்தும் நடிக்க முடியும். அவரால் ரஜினி அல்லது கமல்ஹாசனைப் போல் நடிக்க முடியாது.
ஏனென்றால், க்ளோஸ் அப் ஷாட் வைக்கும் போது அந்த காட்சிகளில் எந்த மாதிரி முகபாவனையை வெளிப்படுத்தி நடிக்கவேண்டும் என்பது விக்ரமுக்கு தெரியாது. நான் அவரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கிய போது எனக்கு இந்த விஷயம் தெரிய வந்தது” என ராஜகுமாரன் கூறியுள்ளார். ராஜகுமாரன் பேசியதை பார்த்த ரசிகர்கள் அப்போ நீங்க பிதாமகன், தெய்வதிருமகள் படங்கள் பார்க்கவில்லை என கூறி வருகிறார்கள்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…