பிரபல இயக்குனர் மாரடைப்பால் உயிரிழப்பு…! சோகத்தில் திரையுலகம்..!
இயக்குனர் சித்திக் தமிழில் வெளியான ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கியவர். இவருக்கு வயது 63. ஐவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து, இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் சித்திக் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.