ஐந்தாவது முறையாக தளபதியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்.!?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக நடிகர் விஜய் தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்த நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் , தற்போது இந்த படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் யோகி பாபுவும் இருந்தால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான சர்கார்,மெர்சல், பிகில், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் யோகி பாபு நடித்திருந்தார். அதில் யோகிபாபுவின் காமெடி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது விஜய்யுடன் 5-வது முறையாக யோகி பாபு இணைவதால், படத்தின் மீது கூடுதலாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.